தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆலோசனைக்குப் பிறகே தெளிந்தேன்: ஆண்ட்ரியா

2 mins read
d042fc95-9d7f-41ff-a3a4-eabfa1a36956
ஆண்ட்ரியா. - படம்: ஊடகம்

பாடகி, நடிகை என சினிமாத் துறையில் 15 ஆண்டுகளைக் கடந்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறார் ஆண்ட்ரியா. நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள அழுத்தமான கதாபாத்திரம் எனில், நிச்சயமாக அந்தக் கதை இவரிடம் செல்லாமல் இருக்காது. செல்வராகவன், கெளதம் மேனன், ராம், வெற்றிமாறன், மிஷ்கின் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்களின் இயக்கத்தில் இவர் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்தும் காலத்திற்கும் நிலைத்து நிற்பவை. அண்மையில் இவரது நடிப்பில் வெளிவந்த தமிழ்ப் படம் `அனல் மேலே பனித்துளி.’ தனது நடிப்பில் வெளிவர உள்ள `கா’ படத்தை பிரபலப்படுத்தும் நிகழ்வுக்கு வந்திருந்தவர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.

“திகிலூட்டும் கதையாக `கா’ படத்தின் கதை விரியும். ஓர் இரவுப் பொழுதில் நடக்கிற கதை. காட்டுக்குள் போய் படப்பிடிப்பை நடத்திய அனுபவம் மறக்கமுடியாதது. “அனல் மேலே பனித்துளி’ படத்தில் நடித்து முடித்தபிறகு அதனுடைய தாக்கம் என் மனதை விட்டு நீங்கவில்லை. மனதளவில் பாதிக்கப்பட்டேன். மருத்துவ ஆலோசனை வகுப்புகளுக்கும் போய் வந்தேன். அதன்பிறகே மனநிலையில் தெளிவு பிறந்தது.

“அண்மையில், ஒரு இந்தி நடிகரின் பேட்டியைப் படித்தேன். அவர் யார் என மறந்துவிட்டேன். ஒரு படத்தில் அவர் பயங்கரவாதியாக நடித்துக்கொண்டிருந்தாராம். அவரது மனைவி “தயவுசெய்து இந்தப் படம் முடியும்வரைக்கும் வீட்டுக்கு வராதீங்க”ன்னு சொல்லிவிட்டார்களாம்.

“காரணம், அவர் ஏற்றிருந்த பாத்திரம் அவரை மிகவும் பாதித்து வேறொரு ஆடவராகவே மாறியிருந்தாராம். அதனால், நிச்சயம் சில படங்களின் தாக்கம் நமது சொந்த வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். அதனை பக்குவமாக கடந்து வருவது முக்கியம்,’’ என்றார். தற்போது ‘நோ என்ட்ரி’, ‘மனுஷி’, குழந்தைகளுக்கான ஒரு புதுப்படத்தில் கடற்கன்னி வேடம், மற்றொரு புதிய படம் என நான்கு படங்கள் தயாராக உள்ளன. அவையெல்லாம் ஒவ்வொன்றாக வெளியீடு காணவேண்டும்.

இப்போது, ஜாலியாக குடும்பத்துடன் பொழுதுபோக்குவதற்கு ஏற்ப ஒரு படத்தில் ஒப்பந்தமாகி உள்ளேன். அதற்கான படப்பிடிப்பு அடுத்த மாதத்தில் தொடங்க உள்ளது எனத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்