மலையாளத்தில் அறிமுகமாகும் எஸ்.ஜே.சூர்யா

1 mins read
dc48a949-d459-49cd-a282-06fc7d864958
பஹத் பாசில், எஸ்.ஜே.சூர்யா. - படம்: ஊடகம்

எஸ்.ஜே.சூர்யா தமிழ், தெலுங்கைத் தொடர்ந்து நடிகராக மலையாளத்திலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா அவர் இயக்கும் படங்களில் அவரே நடித்து வந்தார். அண்மைக்காலமாக, பிற இயக்குநர்களின் இயக்கத்திலும் நடிக்கிறார்.

தமிழ் திரைத்துறையைத் தொடர்ந்து, நடிகர் நானியின் 31வது படமான ‘அடடே சுந்தரா’ என்கிற படத்தின் மூலம் தெலுங்குத் திரைத்துறையில் நுழைந்தார் எஸ்.ஜே.சூர்யா. தெலுங்கைத் தொடர்ந்து தற்பொழுது மலையாளத்திலும் எஸ்.ஜே.சூர்யா நடிகராக அறிமுகம் ஆகிறார்.

பிரபல இயக்குநர் விபின் தாஸ், பகத் பாசிலின் அடுத்தப்டத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில்தான் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

முன்னதாக இயக்குநர் விபின் தாஸ் ஹைதராபாத்தில் எஸ்.ஜே. சூர்யாவை சந்தித்துப் படம் குறித்து பேசியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி