பிரதீப் ரங்கநாதன் அடுத்து இயக்கப்போகும் படத்திற்கு ரூ.10 கோடி சம்பளம் கேட்டு இருக்கிறார்.
டெல்லி கணேஷ் நடிப்பில் 2020ஆம் ஆண்டு வெளிவந்த ‘அப்பா லாக்’ என்ற குறும்படம் மூலம் திரையுலகத்திற்கு இயக்குநராக அறிமுகமானார் பிரதீப்.
இவர் அண்மையில் இயக்கி, நடித்த ‘லவ் டுடே’ படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது, மக்களிடம் இந்தத் திரைப்படம் மிகவும் ரசிக்கப்பட்டது. வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
தற்பொழுது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டு இருக்கும் ‘எல்.ஐ.சி’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கீர்த்தி ஷெட்டி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். எஸ்.ஜே சூர்யா, யோகி பாபு, கவுரி ஜி கிஷன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து படம் இயக்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்காகப் பிரதீப் ரங்கநாதன் சம்பளமாக 10 கோடி ரூபாய் கேட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாவது படத்திற்கே இவ்வளவு சம்பளமா என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர் வளரும் இயக்குநர்கள்.

