ஊழலை ஒழிக்க ஜூனில் வருகிறார் இந்தியன் தாத்தா

ஊழலை ஒழிக்க ஜூனில் வருகிறார் இந்தியன் தாத்தா

1 mins read
53f514f0-ad69-42b8-927e-2418e14c0f1d
கமல்ஹாசன். - படம்: ஊடகம்

இந்தியன் தாத்தா ஜூனில் வருவார் என்று அதிகாரபூர்வ சுவரொட்டியை வெளியிட்டுள்ளது படக்குழு.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படம் நீண்ட காலமாக தயாரிப்புப் பணிகளிலும் பின் பல்வேறு சூழ்நிலை காரணமாக படப்பிடிப்பு தாமதமானது. பின் மீண்டும் படப்பிடிப்புப் பணிகள் வேகமெடுக்க ஆரம்பித்தன.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அறிமுகக் காணொளி வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் பிரத்தியேக சுவரொட்டியை படக்குழுவினர் வெளியிட்டிருக்கின்றனர். அதில் இப்படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது என்று அறிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்