ஏப்ரலுக்குள் படப்பிடிப்பை முடிக்க தீவிரம்

1 mins read
875c53ed-c8e9-4f78-9465-a5e63d850859
விஜய் சேதுபதி. - படம்: ஊடகம்

ஏப்ரல் மாதத்திற்குள் விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பை முடிக்க இயக்குநர் வெற்றிமாறன் முடிவு செய்து படப்பிடிப்பில் தீவிரம் காட்டி வருகிறார்.

விஜய் சேதுபதியின் தேதி, நீண்ட நாள்களுக்குப் பிறகு கிடைத்திருப்பதால், ஒருவழியாக ‘விடுதலை பாகம் 2’ படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளார் வெற்றிமாறன்.

இன்னும் 15 நாள்கள் விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்டதாம். ஆனால், மொத்தமாக அத்தனை நாள்களைத் தர இயலாத சூழலைச் சொன்னாராம் விஜய் சேதுபதி.

இதற்கிடையில், தயாரிப்பாளர் எல்ரெட் குமாரின் நெருக்கடிகளும் அதிகமாகியுள்ளதாம். அதனால் ஏப்ரல் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்கத் தீவிரமாகத் திட்டமிடுகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்