ரன்வீர் சிங்கிடம் கதை சொன்ன லோகேஷ் கனகராஜ்

ரன்வீர் சிங்கிடம் கதை சொன்ன லோகேஷ் கனகராஜ்

1 mins read
edfd875e-1fe5-4060-8aa5-42cb16c000b1
ரன்வீர் சிங். - படம்: ஊடகம்

ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் கதையைச் சொல்லி நடிக்க அழைப்பு விடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அவரது 171வது படத்தில் ரஜினிகாந்த் தவிர மற்ற யாரெல்லாம் நடிக்கிறார்கள் என ஒருவர் பெயர் கூட இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை அணுகி கதை சொல்லி இருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ்.

அநேகமாக அது வில்லன் கதாபாத்திரமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இது பற்றிய அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகா விட்டாலும் ‘ஜெயிலர்’ படத்தில் யாரும் எதிர்பாராத விதமாக மோகன்லால், சிவராஜ்குமார் என ஒவ்வொரு திரையுலகில் உள்ள பிரபலங்கள் சிறப்பு வேடங்களில் நடித்திருந்தனர்.

தற்பொழுது லோகேஷ் கனகராஜ், ரஜினி என்ற கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தில் எது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகின்றது கோலிவுட்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி