தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தனி விமானம்; ரூ.100 கோடி சொகுசு வீடு என கோடிகளில் புரளும் அல்லு அர்ஜுன்

1 mins read
a1be7d55-1549-4040-92f8-c354982454e8
அல்லு அர்ஜுன். - படம்: ஊடகம்

தெலுங்குத் திரையுலக வரலாற்றில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்ற முதல் நடிகரான அல்லு அர்ஜுன் திங்கட்கிழமை (ஏப்ரல்8) தனது 42வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு சமூக ஊடகங்களில் வாழ்த்துகள் குவிகிறது.

தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் முன்னணி இடத்தில் இருக்கும் அல்லு அர்ஜுன், ஒரு படத்துக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறார். அத்துடன், ரூ.460 கோடி சொத்துக்கு அதிபதியாகவும் இருந்து வருகிறார்.

திரையுலகில் மட்டுமன்றி தொழிலிலும் கொடி கட்டிப் பறக்கிறார். அவருக்குச் சொந்தமாக ஹைதராபாத்தில் அல்லு ஸ்டூடியோஸ் என்கிற படப்பிடிப்பு தளம் உள்ளது. சொந்தமாக ரூ.80 கோடி மதிப்பீட்டில் தனி விமானம் வைத்திருக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர்.

அதோடு ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் அல்லு அர்ஜுனுக்கு சொந்தமாக சொகுசு வீடு ஒன்றும் உள்ளது. அதன்மதிப்பு ரூ.100 கோடி எனக் கூறப்படுகிறது. இவரிடம் ஏராளமான சொகுசு கார்களும் உள்ளதாம்.

இவரை புகையிலை விளம்பரத்தில் நடிக்க அணுகியபோது, எத்தனை கோடி கொடுத்தாலும் அதில் நடிக்கமாட்டேன் என்று மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்