சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்துவேன்: டாப்சி

சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்துவேன்: டாப்சி

1 mins read
729d7be7-ed6c-4d7c-bc4a-8bf450d361c5
டாப்சி. - படம்: ஊடகம்

திரையுலகப் பணிகளைவிட சொந்த வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளது என்கிறார் நடிகை டாப்சி.

திருமணத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமது வாழ்க்கையில் இதுவரை சினிமாவுக்குத்தான் அதிக நாள்களைச் செலவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“ஒரு நாளின் 24 மணி நேரத்தில், 12 மணி நேரத்தை உழைப்புக்காகவே செலவழித்துள்ளேன். சொந்த வாழ்க்கை குறித்து யோசிப்பதில்லை.

“ஆனால் அதற்கான நேரம் இப்போது வந்துள்ளது. இப்படிப்பட்ட கதையை விட்டுவிடக் கூடாது என்று நினைக்கும் வகையில் உள்ள கதைகளை மட்டுமே இனி தேர்வு செய்வேன்.

“இனி சினிமாவைவிட சொந்த வாழ்க்கை மிகவும் முக்கியமானது என்பதை உணர்ந்துள்ளேன். இனி அந்த வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பதுதான் என் வேலை,” என்கிறார் டாப்சி.

குறிப்புச் சொற்கள்