அதிதி ராவுடனான திருமண நிச்சயதார்த்தத்தை ரகசியமாக நடத்தியதாகக் கூறப்படுவதை நடிகர் சித்தார்த் மறுத்துள்ளார்.
அந்த நிகழ்வு இருதரப்பு குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட நிகழ்வு என்றும் திருமணத் தேதியை பெரியவர்கள் விரைவில் முடிவு செய்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“திருமணம் எப்போது என்று சிலர் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். உடனுக்குடன் முடிவு செய்ய இது திரையுலகம் சார்ந்த நிகழ்ச்சி அல்ல.
“பட வெளியீட்டு தேதியைப் போல் திருமணத்தேதியை முடிவு செய்ய இயலாது,” என்று கூறியுள்ளார் சித்தார்த்.