33 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் ஜோடி

33 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் ஜோடி

1 mins read
e426d5e1-531a-4ebd-af00-d8560e9c1cad
ஷோபனா. - படம்: ஊடகம்

ரஜினியின் 171வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் ஷோபனா. கடைசியாக இருவரும் ‘தளபதி’ படத்தில் இணைந்து நடித்தனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ரஜினியின் புதுப் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. தற்காலிகமாக ‘ரஜினி 171’ என்று குறிப்பிடுகின்றனர்.

அனிருத் இசையமைக்க, அமிதாப்பச்சன், பகத் ஃபாசில், ராணா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். எதிர்வரும் அக்டோபர் மாதம் இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகை ஷோபனா இப்படத்தில் இணைய உள்ளார். இவரை ஒப்பந்தம் செய்யலாம் என்று இயக்குநர் லோகேஷ் கூறியபோது, ரஜினி நல்ல தேர்வு என்று கூறினாராம்.

இதற்கு முன்பு ரஜினியுடன் சுமார் 33 ஆண்டுகளுக்கு முன்னர் ‘தளபதி’ படத்தில் இணைந்து நடித்துள்ளார் ஷோபனா.

‘ரஜினி 171’ படத்தின் குறுமுன்னோட்டக் காட்சித்தொகுப்பு வரும் 22ஆம் தேதி வெளியீடு காண உள்ளது.

குறிப்புச் சொற்கள்