வனவாசம் முடிவுக்கு வந்துள்ளது: கீர்த்தி சுரேஷ்

வனவாசம் முடிவுக்கு வந்துள்ளது: கீர்த்தி சுரேஷ்

1 mins read
2a8da83e-8202-4859-b244-4539b7671561
கீர்த்தி சுரேஷ். - படம்: ஊடகம்

‘அக்கா’ என்ற தலைப்பில் உருவாகும் இணையத்தொடரில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

இதற்கான படப்பிடிப்பு கடந்த 40 நாள்களாக கேரளாவில் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து, கேரளாவில் தனது வனவாசம் முடிவுக்கு வந்துள்ளதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார் கீர்த்தி.

சுமார் 40 நாள்களுக்குப் பிறகு மீண்டும் சமூக ஊடகங்களில் இயங்கி வருவதாகவும் அருமையான அற்புதமான படப்பிடிப்பில் 40 நாள்கள் கலந்துகொண்ட பின்னர் வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“எனது அடுத்து படத்துக்கான படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ஆவலுடன் காத்திருக்கிறேன். வெயிலின் சூட்டைத் தணிக்க மழையும் வந்து ஆச்சர்யப்படுத்துகிறது.

“அனைவரும் மீண்டும் இணைவோம்,” என்று குறிப்பிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

இவர் தமிழில் தற்போது ‘ரகுதாத்தா’, ‘ரிவால்வர் ரீட்டா’, ‘கண்ணிவெடி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

குறிப்புச் சொற்கள்