ரூ.35 லட்சம் மதிப்புள்ள கார்: பரிசளித்த அஜித், நெகிழ்ந்துபோன ஆரவ்

1 mins read
82fa5a0b-d87c-4291-b91e-ec4e2c9e89c4
அஜித்துடன் ஆரவ். - படம்: ஊடகம்

நடிகர் அஜித் தன்னுடன் பணியாற்றும் கலைஞர்களை தனிப்பட்ட வகையில் கௌரவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அந்த வகையில், ‘விடாமுயற்சி’ படத்தில் தன்னுடன் மோதும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘பிக்பாஸ்’ புகழ் ஆரவ்வுக்கு விலை உயர்ந்த கார் ஒன்றைப் பரிசளித்துள்ளாராம்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்துடன் மோதும் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆனது முதலே, அஜித்துடன் நெருக்கமாகிவிட்டார் ஆரவ்.

இருவரும் சேர்ந்து இருசக்கர வாகனப் பயணம் மேற்கொள்வது, பிரியாணி சமைப்பது, படப்பிடப்பு நடக்கும் ஊரில் உள்ள முக்கியமான இடங்களைச் சுற்றிப்பார்ப்பது என்று எப்போதுமே இணைந்து காணப்படுகின்றனர்.

இந்நிலையில் ஆரவ் எதிர்பாராத வகையில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றைப் பரிசளித்துள்ளார் அஜித். இத்தகவலை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார் ஆரவ்.

இவருக்கும் அஜித்தைப் போலவே இருசக்கர வாகனம், கார் ஓட்டுவதில் அதிக ஆர்வம் உள்ளது. ‘விடாமுயற்சி’ பட வெளியீட்டுக்குப் பின்னர் இருவரும் நீண்ட தூர பைக் பயணங்களுக்கு இப்போதே திட்டமிட்டு வருவதாகத் தகவல்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்