தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முடிவுக்கு வந்த சூரி, விஷ்ணு விஷால் மோதல்

1 mins read
823f9dc4-84f2-4320-9ca1-61094f4fa362
நடிகர் சூரி, தனது தந்தையுடன் விஷ்ணு விஷால். - படம்: ஊடகம்

தமக்கும் நடிகர் சூரிக்கும் இடையே நிலவி வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

நிலம் வாங்கித் தருவதாகக் கூறி தம்மிடம் இருந்து ரூ.2.7 கோடி பெற்றுக்கொண்டு விஷ்ணு விஷாலின் தந்தையும் காவல்துறை அதிகாரியுமான ரமேஷ் குடவாலா ஏமாற்றிவிட்டதாக சூரி குற்றஞ்சாட்டினார். இதை விஷ்ணு விஷால் திட்டவட்டமாக மறுத்தார்.

கடந்த இரண்டு ஆண்டு களுக்கும் மேலாக இந்த மோதல் நீடித்து வந்தது. இருவரும் இணைந்து நடிப்பதை முற்றிலுமாகத் தவிர்த்தனர்.

இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து இரு தரப்பினரும் மனம்விட்டுப் பேசியதை அடுத்து மோதல் முடிவுக்கு வந்துள்ளது.

சூரியுடன் பேசியதாகவும் தங்களுக்கு இடையிலான பிரச்சினையில் மூன்றாம் நபர் ஒருவர் நுழைந்ததே சிக்கலுக்குக் காரணம் என்றும் தெரிவித்துள்ளார் விஷ்ணு.

மேலும், சூரியுடனும் தன் தந்தையுடனும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ள விஷ்ணு விஷால், “எதற்கும், யாருக்கும் காலம் ஒன்றே பதில் சொல்லும். நல்லதே நடக்கட்டும் சூரி அண்ணா, லவ் யு அப்பா,” என்று பதிவிட்டுள்ளார்.

அதை மீண்டும் பகிர்ந்து, “நடப்பவை எல்லாம் நன்மைக்கே, நன்றிங்க,” என்று சூரியும் தன் பங்குக்கு பின்னூட்ட மிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்