துபாயில் சாய்பாபா கோவிலுக்குச் சென்ற விஜய்

துபாயில் சாய்பாபா கோவிலுக்குச் சென்ற விஜய்

1 mins read
93fee095-8b27-4953-8664-b0bef89b819f
துபாயில் உள்ள சாய்பாபா கோவிலில் விஜய். - படம்: ஊடகம்

துபாய் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் விஜய், அங்குள்ள சாய்பாபா கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரது கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

இதையடுத்து, நடிகர் விஜய் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை ஆதரிக்கிறாரா என சில தரப்பினர் கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கு தமிழக வெற்றிக் கழகம் உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளது.

ஒரு புகைப்பட்டத்தைக் கொண்டு விஜய்யின் அரசியல் நிலைப்பாட்டை முடிவு செய்வது சரியல்ல என புஸ்ஸி ஆனந்த் தரப்பு தெரிவித்துள்ளதாம்.

இதையடுத்து, சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.

குறிப்புச் சொற்கள்