‘சென்னை ஸ்டோரி’ என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் இருந்து நடிகை ஷ்ருதிஹாசன் விலகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திமேரி என்.முராரி எழுதியுள்ள ’தி அரென்ஜ்மென்ட்ஸ் ஆஃப் லவ்’ என்ற நாவலைத் தழுவி இந்தப்படம் உருவாகிறது.
பரபரப்பான சென்னை மாநகர பின்னணியில் நடைபெறும் ஒரு காதல் கதையை நகைச்சுவை கலந்து ரசிகர்களுக்கு தர உள்ளனர். இந்தப் படத்தில் நாயகியாக ஒப்பந்தம் ஆனார் ஸ்ருதிஹாசன்.
முதல்நாள் படப்பிடிப்பின்போது ‘புதிய நாள், புதிய படம், புதிய சக்தி’ என்று சமூக ஊடகத்தில் அவர் பதிவிட்டு இருந்தார்.
அதன் பின்னர் மேலும் சில நாள்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் திடீரென இப்படத்தில் இருந்து ஷ்ருதி விலகியிருப்பது அவரது ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது.
இந்தப்படத்தில் முதலில் ஒப்பந்தம் ஆனவர் சமந்தா. அவர் விலகிய பிறகே ஷ்ருதி ஒப்பந்தமானார். தற்போது ஷ்ருதியும் விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

