சீதை கதாபாத்திரம்: ரூ.10 கோடி கேட்ட சாய் பல்லவி

சீதை கதாபாத்திரம்: ரூ.10 கோடி கேட்ட சாய் பல்லவி

1 mins read
ded22fae-f46e-4a40-9792-90811e79715e
சாய் பல்லவி. - படம்: ஊடகம்

சீதை கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சாய் பல்லவி ரூ.10 கோடி ஊதியம் கேட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பாலிவுட்டில் தயாராகும் புதுப்படம் ஒன்றில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் ஒப்பந்தமாகி உள்ளார். ராவணனாக நடிகர் யஷ் நடிக்க உள்ளார்.

சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தமான நிலையில், சீதையாக நடிக்க சாய் பல்லவியை அணுகியது தயாரிப்புத்தரப்பு.

மொத்தம் மூன்று பாகங்களாக உருவாகும் படம் என்பதால் ரன்பீர் கபூரும் யஷ்ஷும் 300 நாள்கள் கால்ஷீட் ஒதுக்கியதாகக் கூறப்படுகிறது.

அதே போல் சாய் பல்லவியும் கால்ஷீட் ஒதுக்க வேண்டும் எனப் படத்தின் இயக்குநர் கேட்டுக் கொண்டாராம்.

இதையடுத்து, மூன்று பாகங்களுக்குமாகச் சேர்த்து ரூ.10 கோடி சம்பளம் கேட்டுள்ளார் சாய் பல்லவி.

ஒரு படத்தில் நடிக்க இவ்வளவு பெரிய தொகை சம்பளமா என்று சிலர் ஆச்சரியப்பட மூன்று பாகங்கள், 300 நாள்கள் கால்ஷீட் என்பதைப் பலர் கவனிக்கத் தவறிவிட்டதாகச் சொல்கிறார் சாய் பல்லவி.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்