சென்னை கொரட்டூரில் தனது அம்மா ஷோபாவுக்காக நடிகர் விஜய் சாய்பாபா கோயிலைக் கட்டியுள்ளார். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தக் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
அண்மையில், விஜய் சாய்பாபா கோவிலுக்குச் சென்று வந்தது போல தகவல்களும் புகைப்படங்களும் பரவின.
இந்நிலையில், அது சென்னை கொரட்டூரில் விஜய் கட்டிய கோவில்தான் அது என்றும் அங்கு எடுத்த புகைப்படம்தான் சமூக ஊடகங்களில் பரவியது என்ற தகவலும் இப்போது தெரிய வந்துள்ளது. ஏறக்குறைய 15 கிரவுண்டில் இந்த சாய் பாபா கோயிலைக் கட்டி முடித்து, கடந்த பிப்ரவரி மாதத்தில் குடமுழுக்கு விழாவையும் நடத்தி முடித்துள்ளார் விஜய்.
விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் தீவிர சாய்பாபா பக்தர் என்பதால் தனது தாயாருக்காக இந்தக் கோவிலை விஜய் கட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது நடித்து வரும் ‘கோட்’ படத்திற்குப் பிறகு தனது 69வது படத்தில் நடிக்கப் போகிறார் விஜய். இப்படத்தில் நடித்து முடித்ததும் அரசியலில் முழுமையாக ஈடுபட காட்டவும் முடிவு செய்துள்ளாராம்.