நடிகர் அருள்மணி காலமானார்

1 mins read
a9b6706b-2023-482b-b62c-f73344dd2e91
அருள்மணி. - படம்: ஊடகம்

நடிகரும் அரசியல் பேச்சாளருமான அருள்மணி மாரடைப்பால் காலமானார்.

ஏராளமான படங்களில் குணச்சித்திர, வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் அருள்மணி.

அதிமுக ஆதரவாளரான இவர், பின்னர் அக்கட்சியில் இணைந்து பேச்சாளராகச் செயல்பட்டு வந்தார்.

நடப்பு நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுகவுக்காக களப்பணியாற்றி வந்த அருள்மணி, வியாழக்கிழமை அன்று பிரசாரம் முடிந்து வீடு திரும்பிய நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தார் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்