அடுத்த மாதம் வெளியாகும் ‘மகாராஜா’

1 mins read
df11415a-a099-498e-a1d7-e5d44fd8dbcd
நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படம் ‘மகாராஜா’. - படம்: ஊடகம்

விஜய் சேதுபதியின் 50வது படமான ‘மகாராஜா’ மே 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் அனுராக் காஷ்யப், நட்டி, முனிஷ்காந்த், பாரதிராஜா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் முதல் ‘போஸ்டர்’ அண்மையில் வெளியானது. இதில் விஜய் சேதுபதி வித்தியாசமான தோற்றத்தில் இருந்தார். அது அவரது ரசிகர்கள் இடையே பெறும் ஆர்வத்தைத் தூண்டியது.

இந்தப் படத்தில் அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.

படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்