தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிம்புவுடன் கூட்டணி சேர விருப்பம்: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து

1 mins read
ea6dbf3a-f2b7-4a63-9443-f5d6c26b9e89
நடிகர் சிம்பு  - படம்: ஊடகம்

‘ஓ மை கடவுளே’ படத்தை இயக்கிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து ‘லவ் டுடே’ நாயகன் பிரதீப் ரங்கநாதனை வைத்து அடுத்த படம் இயக்கவுள்ளார்.

இந்தப் படம் ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகிறது. படத்தின் தலைப்பு விரைவில் வெளியாக உள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கவுள்ளது.

இந்நிலையில், அஸ்வத் மாரிமுத்து, தமது அடுத்த படத்தில் நடிகர் சிம்பு தான் கதாநாயகன் என்று சமூக ஊடகங்கள் வழி தகவல் வெளியிட்டுள்ளார்.

“சிம்பு என்னை அழைத்து பாராட்டினார். அவருக்காக நான் வித்தியாசமான கதை வைத்துள்ளேன். எனது அடுத்த படத்தை சிம்புவை வைத்து இயக்க விரும்புகிறேன். அவர் தயாரானதும் அடுத்தக்கட்டத்திற்கு செல்வேன்” என்று அஸ்வத் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்