தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தடம்பதிக்க விரும்பும் தன்ஷிகா

1 mins read
5041bbc9-d0a6-4a6a-ae29-369d1fa5dae9
பேராண்மை, அரவான்,பரதேசி, கபாலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சாய் தன்‌ஷிகா.  - படம்: சமூக ஊடகம்

பேராண்மை, அரவான்,பரதேசி, கபாலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சாய் தன்‌ஷிகா.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ‘லாபம்’ என்ற படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார். அதன்பிறகு அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் அமையவில்லை.

தற்போது மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ‘தி புரூப்’ என்ற படத்தில் த‌ன்‌ஷிகா நடித்துள்ளார். ரித்விகா, மைம் கோபி, மாரிமுத்து உள்ளிட்ட பலர் அப்படத்தில் நடித்துள்ளனர்.

‘தி புரூப்’ படத்தை ராதிகா மாஸ்டர் இயக்கியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் அடுத்த மாதம் 3ம் தேதி இப்படம் வெளியாகிறது.

தமிழ் திரையுலகில் தன்ஷிகா தடம்பதிக்க இந்தப் படத்தின் வெற்றி மிகமுக்கியமான ஒன்று என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்