வெற்றி மிக முக்கியமானது: ராஷ்மிகா

வெற்றி மிக முக்கியமானது: ராஷ்மிகா

1 mins read
3b9e27b2-5347-4811-a1ff-3609a311226e
ராஷ்மிகா மந்தனா - படம்: ஊடகம்

இந்திய அளவில் அதிக ரசிகர்களை கவர்ந்தவர் என்ற பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

புஷ்பா, தமிழில் சுல்தான், வாரிசு படங்களில் நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. “என்னை விட அழகான மற்றும் திறமையான பெண்கள் அதிக அளவில் உள்ளனர். ஆனால், எனக்கு பிரபலமாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால்தான் நான் இந்த இடத்திற்கு உயர்ந்துள்ளேன், அதற்கு நான் உண்மையிலேயே நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.

“வாழ்க்கையில் மகிழ்ச்சி,வெற்றி ஆகியவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். கடந்த சில ஆண்டுகளாக இதை நான் கற்றுக்கொண்டேன்,” என்று ராஷ்மிகா கூறினார்.

தற்போது ராஷ்மிகா புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார்.

குறிப்புச் சொற்கள்