‘சித்தா’ படத்துக்கு கிடைத்த வரவேற்பால் உற்சாகத்தில் உள்ளார் சித்தார்த். இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஒரு பேட்டியில் மகிழச்சியை வெளிப்படுத்தியுள்ள அவர், ‘சித்தா’ படத்தை எதிர்மறையாக விமர்சித்த சிலருக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
“இப்படத்தை எங்களால் திரையில் பார்க்க முடியவில்லை என எந்தப் பெண்ணும் என்னிடம் கூறவில்லை. ஆனால் சில ஆண்கள் தம்மிடம் இவ்வாறு கூறியதாக படத்தின் இயக்குநர் அருண் குமார் தெரிவித்தார்.
“மிருகம்’ என்ற தலைப்பு வைக்கப்பட்ட படத்தை பார்க்கிறார்கள். ஆனால் என் படத்தைப் பார்க்கும்போது தொந்தரவாக இருந்ததாம். இதற்குப் பெயர் தொந்தரவு இல்லை. வெட்கம், குற்ற உணர்வு,” என்று சித்தார்த் கூறினார்.
அண்மையில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான ‘அனிமல்’ படத்தைத்தான் சித்தார்த் ‘மிருகம்’ என மறைமுகமாக குறிப்பிட்டதாகக் கருதப்படுகிறது. அதில் வன்முறை, பெண்களை கீழ்த்தரமாக நடத்தும் காட்சிகள் அதிகம் இடம் பெற்றுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.