ராதிகா அறிவுரை முடிவை மாற்றியது

தமிழில் ஒரு நல்ல நடிகை என பெயர் வாங்கியிருக்கேன். அதேபோல் மற்ற மொழிப் படங்களிலும் நல்ல பெயர் வாங்கவேண்டும் என்ற ஆசை உள்ளதாகத் தெரிவித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

மற்ற மொழிப் படங்களில் நடிப்பதற்குத் தயங்கிக்கொண்டிருந்த எனக்கு மூத்த முன்னணி நடிகை ராதிகாவின் அறிவுரைதான் நல்ல பட வாய்ப்புகளை நோக்கி என்னை ஊக்கத்துடன் பயணப்பட வைத்துள்ளது என்கிறார் ஐஸ்வர்யா.

“மற்ற மொழிப் படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு வருகிறது. ஆனால், மற்ற மொழிகளை முழுமையாக என்னால் புரிந்துகொள்ள முடியாததால் அதில் நடிப்பதற்கு தயக்கமாக இருந்தது.

“இதுகுறித்து நடிகை ராதிகாவிடம் ஒருமுறை கூறியபோது, “மொழிப் பிரச்சினைகளை எல்லாம் ஒரு தடையாக நினைக்கக்கூடாது.

“மும்பையில் இருந்தெல்லாம் தமிழகத்துக்கு வந்து தமிழில் நடித்துவிட்டுச் செல்கிறார்கள். உன்னால் அது முடியாதா? இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு நடிப்புத் திறனை வெளிப்படுத்து,” என்று அறிவுறுத்தினார்.

“அதன்பிறகுதான் மற்ற மொழிப் படங்களிலும் நடிப்பதற்கு என்னுள் ஆர்வம் பிறந்தது,” என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

2023ஆம் ஆண்டு ஐஸ்வர்யாவின் ஆறு படங்கள் வெளியீடு கண்ட நிலையில், இவ்வாண்டு முதல் படமாக ‘டியர்’ படத்தின் வழி தனது கணக்கைத் தொடங்கியிருக்கிறார்.

அவர் திரையுலக அனுபவம் குறித்து ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “தமிழ் திரையுலகம் இப்போது மிகவும் நன்றாக உள்ளது.

“நல்ல கதைகளை நோக்கி தமிழ்ச் சினிமா சென்றுகொண்டு உள்ளது. திரைப்படத்தைப் பார்க்க வரும் ரசிகர்களும் பொதுமக்களும் புதிய நடிகர்கள், முன்னணி நடிகர்கள் என்று பார்க்காமல் கதைகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை ரசிக்கிறார்கள்.

“இப்போது தமிழ் ரசிகர்கள் நல்ல கதையம்சம் கொண்ட மற்ற மொழிப் படங்களையும் கொண்டாடுகிறார்கள். அதற்கு அண்மைய உதாரணமாக `பிரேமலு’, `மஞ்சும்மல் பாய்ஸ்’ ஆகிய படங்களைச் சொல்லலாம்.

“கதைகள் நன்றாக உள்ள படத்தில் கொஞ்சம் பரிட்சயமான நடிகர்களும் இருந்தால் அந்தப் படம் அதிகமானோரை கவரும் வெற்றிப் படமாக மாறிவிடும்,” என்கிறார் ஐஸ்வர்யா.

இனிமேல் எனது கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என முடிவு செய்துள்ளேன்.

என்னால் ஒரு மொழியை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் நடிக்கமுடியாது. அதுதான் என்னுடைய மிகப்பெரிய பிரச்சினை. மொழி புரியவில்லை எனில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த முடியாது என விளக்கம் அளிக்கிறார் ஐஸ்வர்யா.

தமிழ் சினிமாவில் ‘சித்தா’ இயக்குநர் அருண்குமார், `காக்கா முட்டை’ இயக்குநர் மணிகண்டனின் பணிகள் மிகவும் பிடிக்கும். இவங்க ரெண்டு பேரும் இப்போது இருப்பதைவிடவும் இன்னும் பெரிய இடத்துக்கு முன்பே போயிருக்கவேண்டும்.

நடிகைகளில் சாய் பல்லவியோட நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது கதைத் தேர்வு எப்போதும் மிகவும் சிறப்பாக இருக்கும். தனக்குப் பொருத்தமான கதைகளையே அவர் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

ஒரு வகையில் நானும் அப்படித்தான். எனக்குப் பொருத்தமில்லாத கதைகளில் நடிப்பதில்லை. சிலர் என்னிடம், “ஏன் கவர்ச்சியாக படங்கள் செய்வதில்லை எனக் கேட்கிறார்கள். கவர்ச்சியாக நடிக்கக் கூடாது என எதுவும் இல்லை. எனக்கு அது ஒத்துவராது.

“தமிழ் ரசிகர்களிடையே வாங்கிய நல்ல பெயரை கெடுத்துக் கொள்ளக்கூடாது என நினைக்கிறேன். அவ்வளவுதான்.

“அண்மையில் பார்த்த `லவ்வர்’ பட நாயகி கெளரி பிரியாவின் நடிப்பு பிரமாதம். நடிகர்களில் மணிகண்டன், கவின் என நிறைய பேர் மிகவும் சிறப்பாக நடித்து வருகிறார்கள்,” எனப் பாராட்டியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!