இயக்குநர் மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து விலகிய துல்கர் சல்மான், ஜெயம் ரவி மீண்டும் படத்தில் இணைந்துள்ளனர்.
முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைக் களத்தில் உருவாகும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் நடிகை த்ரிஷா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தத் திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் மற்றும் முன்னணி தமிழ் நடிகர் ஜெயம் ரவி ஆகிய இருவரும் இணைந்தனர்.
ஆனால் படப்பிடிப்புக்கான கால அவகாசம் நீண்டு கொண்டே இருந்த காரணத்தினாலும் துல்கர் சல்மான் ஏற்கெனவே கால்சீட் கொடுத்திருந்த படங்களை முடிக்க வேண்டிய அவசியத்தின் காரணமாகவும் துல்கர் சல்மான் இந்தப் படத்தில் இருந்து விலகினார், அவரைத் தொடர்ந்து அதே காரணங்களுக்காக ஜெயம் ரவியும் விலகினார்.
இந்தச் சூழலில் துல்கர் சல்மானின் கதாபாத்திரத்தில் நடிக்க சிம்பு படத்தில் இணைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஏற்கெனவே அவர் நடித்து வரும் ‘STR 48’ பட பணிகள், ‘தக் லைஃப்’ பட பணிகள் முடிந்த பிறகு துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதேநேரம் உலகநாயகன் கமல்ஹாசன் தற்பொழுது திமுகவோடு இணைந்து தேர்தல் களத்தைச் சந்தித்து வருவதால் அவருடைய கால்சீட் கிடைக்காமல் பெரும் தலைவலிகளை சந்தித்து வருகின்றார் இயக்குநர் மணிரத்னம்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் தற்பொழுது கிடைத்துள்ள தகவலின்படி ஜெயம் ரவியும் துல்கர் சல்மானும் மீண்டும் இந்தப் படத்தின் பணிகளில் இணைந்துள்ளனர்.
சிம்புவும் இந்தத் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் சைபீரியா நாட்டில் ஜெயம் ரவி, கமல்ஹாசன், துல்கர் சல்மான் மற்றும் த்ரிஷா ஆகிய நால்வரும் ஒன்று கூடும் இறுதிக் காட்சி படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
தேர்தல் முடிந்த அடுத்த நாளே படக்குழு சைபீரியா நாட்டிற்கு புறப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
முதலில் படத்தில் இருந்து விலகிய இரு முன்னணி நடிகர்கள் மீண்டும் படத்தில் இணைந்துள்ளது அவர்களுடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.