இதயத்தை உறையவைக்கும் இணையத்தொடர்

இதயத்தை உறையவைக்கும் இணையத்தொடர்

1 mins read
4c014bc1-99e5-4628-b5dc-8eed0e083373
காஜல் அகர்வால். - படம்: ஊடகம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடித்திருக்கும் ‘லைவ் டெலிகாஸ்ட்’ இணையத்தொடர் திகில் காட்சிகளுடன் வெளியாகி உள்ளது.

தற்பொழுது திகிலுடன் கலந்த பேய்ப் படமாக ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’ ஓடிடியில் வெளியாகி இருக்கும் இந்தத் தொடரை பலரும் பார்த்து வருகின்றனர்.

தொடக்கம் முதல் முடிவு வரை பரபரப்பான ஹாரர் கதைக்களத்தை கொண்ட இந்த இணையத் தொடரைப் பார்க்க நிச்சயம் மன தைரியம் தேவைப்படும் என்கின்றனர் தொடரைப் பார்த்தவர்கள்.

மொத்தம் 7 பாகங்களாக உருவாகி இருக்கும் இந்த இணையத்தொடரின் ஒவ்வொரு காட்சிகளும் ஒன்றுக்கு ஒன்று குறைந்தது இல்லை என்பதுபோல அடுத்தடுத்து வரும் திகிலால் இதயம் படபடக்க பார்க்கப்படுவதாகக் கூ றப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்