தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலையாளத்தில் நிவின் பாலியுடன் இணையும் நயன்தாரா

1 mins read
3d0782da-88fd-4fe9-98c5-a965e79ffcf0
நிவின் பாலி, நயன்தாரா. - படம்: ஊடகம்

தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாததால் நயன்தாரா நிவின் பாலியுடன் மலையாளப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

நயன்தாரா ‘டெஸ்ட்’, ‘மண்ணாங்கட்டி’ போன்ற படங்களில் நடித்து முடித்து உள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளப்படத்தில் நடித்து வந்த நயன்தாரா, ‘ஜவான்’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆனார்.

‘ஜவான்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நயன்தாராவிற்கு பெரியதாக எந்த வாய்ப்பும் வரவில்லை.

அதனால், மலையாளப் பக்கம் தாவி உள்ள நயன்தாரா, நிவின் பாலி நடிப்பில் உருவாகி வரும் ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இப்படத்தை ஜார்ஜ் பிலிப் ராய் மற்றும் சந்தீப் குமார் ஆகியோர் இணைந்து இயக்க உள்ளனர். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை அண்மையில் படக்குழு வெளியிட்டுள்ளது.

நயன்தாரா நடிகர் நிவின் பாலியுடன் இணைந்து, 2019ஆம் ஆண்டு ‘லவ் ஆக்‌ஷன் ட்ராமா’ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்