எம்.எஸ்.பாஸ்கர்: எனக்கு பயமாக இருக்கிறது

எம்.எஸ்.பாஸ்கர்: எனக்கு பயமாக இருக்கிறது

1 mins read
31ec35c8-1f7b-4001-96b2-d712ad8df99d
எம்.எஸ்.பாஸ்கர். - படம்: ஊடகம்

‘அக்கரன்’ படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை ரசிகர்கள் ஏற்பார்களா என்று சந்தேகத்துடன் கூறியிருக்கிறார் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்.

‘அக்கரன்’ படம் பற்றி கூறுகையில், “படத்தின் கதையைக் கேட்டபோது, வில்லங்கமாக இருக்கிறது. வேறு யாரையாவது வைத்து எடுங்கள் என்று கூறினேன். ஆனால், படத்தில் அந்த வேடத்திற்கான வயது மற்றும் நடிப்புக்கு நான்தான் சரியாக இருப்பேன் என்று சொல்லி சம்மதிக்க வைத்தனர்.

“மகள்கள் என்றாலே நான் உருகிவிடுவேன்.வெண்பாவும், பிரியதர்ஷினியும் எனது மகள்களாக அருமையாக நடித்துள்ளனர்.

“மண்புழுகூட யாராவது மிதித்தால் திரும்பி கடிக்க வரும். அதுபோல், கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு முதியவரின் கதை இது.

“நாயகனாக நடிக்க வேண்டும் என்று என்னிடம் யாராவது கேட்டால் உடனே பயந்து விடுவேன். ஆனால், இதில் நான் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ரசிகர்கள் என்ன சொல்வார்களோ என்று எனக்கு பயமாக இருக்கிறது,” என்றார் பாஸ்கர்.

குறிப்புச் சொற்கள்