விஜய் சேதுபதியுடன் இணைந்த மம்தா மோகன்தாஸ்

1 mins read
e93451f5-ee98-4f51-bd67-71f02beaf21d
மம்தா மோகன்தாஸ். - படம்: ஊடகம்

விஜய் சேதுபதி நடிக்கும் ‘மகாராஜா’ படத்தில் மம்தா மோகன்தாஸ் நடித்துள்ளார்.

‘மகாராஜா’ படம் விஜய் சேதுபதியின் 50வது படம். அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்த காட்சிகள் இடம்பெறுவதால், விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யப், நட்டி, முனீஷ்காந்த், சிங்கம்புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் நடித்துள்ளனர்.

வரும் மே மாதம் 16ஆம் தேதி ‘மகாராஜா’ படம் திரைக்கு வருகிறது. தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மம்தா மோகன்தாஸ் நடித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்