தேர்தல் நேரத்திலும் வெளியாகும் புது படங்கள்

தேர்தல் நேரத்திலும் வெளியாகும் புது படங்கள்

1 mins read
602906e1-6772-40be-94f6-f9003650ff2a
‘வல்லவன் வகுத்ததடா’. - படம்: ஊடகம்

தேர்தல் இருந்தால் என்ன? இந்த வாரமும் புது படங்கள் திரையரங்கில் வெளியாக வரிசைக்கட்டி நிற்கின்றன.

தேர்தலே வந்தாலும் புதிய படங்கள் வருவதை நிறுத்த வாய்ப்பில்லை என இந்த வாரமும் சில புதிய படங்கள் வெளியாக உள்ளன.

ஏப்ரல் 19ஆம் தேதியன்று பகல் நேரக் காட்சிகள் கண்டிப்பாக இருக்காது. இருந்தாலும் அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் காட்சிகள் இடம்பெறலாம். இருந்தாலும் அன்றைய தினம் வருகிறோம் என ‘வல்லவன் வகுத்ததடா’ என்ற படம் வெளியாகிறது.

அடுத்து ஏப்ரல் 20ஆம் தேதி ‘பைன்டர், சிறகன்’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

வரும் வாரங்களில் பல படங்கள் வர உள்ளதால் நான்கு மாதங்களுக்குப் பிறகு தமிழ்த் திரையுலகம் புத்துயிர் பெறும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்