தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரஜினி மகளாக நடிக்கும் ஷ்ருதி ஹாசன்

1 mins read
14317999-8209-43ff-ad5f-528494a13d19
ரஜினிகாந்த், ஷ்ருதி ஹாசன். - படம்: ஊடகம்

ரஜினி நடிக்க இருக்கும் அவரது 171வது படத்தில் ஷ்ருதி ஹாசன் நடிக்க இருக்கிறார்.

ஞானவேல் இயக்கும் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வரும் ரஜினி, அந்தப் படத்தையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171வது படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்தின் முதல் சுவரொட்டி ஏற்கெனவே வெளியான நிலையில், தற்போது இப்படத்தின் அறிமுகக் காணொளிக்கான படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. வரும் வாரத்தில் அந்தக் காணொளியை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

ரஜினி இந்தப் படத்தில் எதிர்மறைக் கலந்த வேடத்தில் தாதாவாக நடிப்பதாகக் கூறப்படும் நிலையில் த்ரிஷா, ஷோபனா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் கமலின் மகளும் நடிகையுமான ஷ்ருதி ஹாசன் ரஜினியின் மகளாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவும் இணைய இருக்கிறார். ‘ஜெயிலர்’, ‘வேட்டையன்’ படங்களைப் போலவே மற்ற மொழி நடிகர்களும் நடிக்கும் படமாக ‘ரஜினி 171’ உருவாகும் எனத் தெரிகிறது. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகலாம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்