தனுஷுக்கு பச்சைக்கொடி காட்டிய இளையராஜா

1 mins read
11907bae-c082-4689-924b-1f45e351d490
தனுஷ், இளையராஜா. - படம்: ஊடகம்

 முதல்நாள் படப்பிடிப்பின்போது அங்கு வந்து தன்னை ஆசீர்வதிக்கவேண்டும் என்று கேட்ட தனுஷின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார் இளையராஜா.

`இளையராஜா’ வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பட வேலைகள் வேகம் எடுக்கத் தொடங்கிவிட்டன. படப்பிடிப்புக்கு முன் அதற்கான தயாரிப்பு வேலைகளுக்காக இளையராஜாவை வாரத்துக்கு இரண்டு முறையாவது சந்தித்துவிடுகிறார் தனுஷ். இந்தச் சந்திப்பில் `பயோபிக்’ படத்துக்கான உரையாடல்கள்தான் அதிகம் நிகழ்கின்றன. முதல் நாள் படப்பிடிப்பு இடத்திற்கு வந்திருந்து ஆசீர்வதிக்க வேண்டுமெனக் கேட்டிருக்கிறார் தனுஷ். அதற்கு, ராஜாவும் பச்சைக்கொடி காட்டிவிட்டாராம்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி