சமூக ஊடகத்தில் கதாநாயகனைப் புகழ்ந்த ஊர்வசி: விமர்சித்த ரசிகர்கள்

சமூக ஊடகத்தில் கதாநாயகனைப் புகழ்ந்த ஊர்வசி: விமர்சித்த ரசிகர்கள்

1 mins read
bfb32013-de54-4317-85e7-14b6d21d8508
ஊர்வசி ரௌடேலா. - படம்: ஊடகம்

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவனம் செலுத்தி வரும் நடிகை ஊர்வசி ரௌடேலா, ஜூனியர் என்டி ஆருடன் இணைந்து நடிக்கிறார்.

தமிழில் ‘லெஜன்ட்’ படத்தில் நாயகியாக நடித்த பின்னர் அவருக்கு கோடம்பாக்கத்தில் சொல்லிக் கொள்ளும்படியான வாய்ப்புகள் அமையவில்லை.

இந்நிலையில் தெலுங்கில் மூத்த நடிகர் பாலகிருஷ்ணாவின் 109வது படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் ஊர்வசி. இப்படத்துக்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

இதற்காக அங்கு தங்கியுள்ள ஊர்வசி, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அருகில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்று திரும்புகிறார்.

அப்போது ஒருமுறை ஜூனி யர் என்டிஆரைச் சந்தித்தாராம். அவரது எளிமை, நேர்மை, ஒழுக்கம் உள்ளிட்ட பல அம்சங்கள் தம்மை வெகுவாகக் கவர்ந்துள்ளது என சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“எதையும் முகத்துக்கு நேராகப் பேசுகிறார் ஜூனியர் என்டிஆர். அவர் சிங்கத்தின் இதயம் கொண்ட நல்ல மனிதர். “உங்களுடன் இணைந்து பணியாற்ற நீண்ட நாள்களாகக் காத்திருக்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார் ஊர்வசி.

இதையடுத்து சமூக ஊடகம் மூலம் முன்னணி நாயகர்களுக்கு அவர் தூது விடுவதாகப் பலர் விமர்சித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்