இயக்குநர் லிங்குசாமி தற்பொழுது மகாபாரதத்தை இரண்டு பாகங்களாக எடுக்கும் வேலையில் இறங்கி இருக்கிறார்.
தொடர் வெற்றிகளைக் கொடுத்து வந்த இயக்குநர் லிங்குசாமி ஒரே நேரத்தில் ‘உத்தம வில்லன்’ படைத்தைத் தயாரித்ததோடு ‘அஞ்சான்’ படத்தை இயக்கியதில் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தார்.
அதிலிருந்து மீண்டு வந்துவிடலாம் என்று தெலுங்கு இளம் நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து ‘வாரியர்’ என்ற படத்தை இயக்கினார். அந்தப் படமும் எதிர்பார்த்த வெற்றியை அவருக்குத் தரவில்லை.
இந்நிலையில் மகாபாரதம் கதையைத் தழுவி அர்ஜுனன், அபிமன்யு என்கிற இரண்டு கதாபாத்திரங்களை வைத்து இரண்டு பாகங்களாக சரித்திரப் படத்தை இயக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார் லிங்குசாமி.
தமிழில் இதற்கான கதை எழுதும் வேலைகளில் எழுத்தாளர் ஜெயமோகனும் இந்தியில் பிரபல பாலிவுட் கதாசிரியர் ஒருவரும் கவனித்து வருகின்றனர்.
மிகப்பெரிய பாலிவுட் நிறுவனம் ஒன்று இந்தப் படத்தை தயாரிக்க உள்ளதாக லிங்குசாமி கூறியுள்ளார்.

