தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இம்மாத இறுதியில் புதுப்பொலிவுடன் ‘குக் வித் கோமாளி’

1 mins read
f8559fd6-ea69-4ac3-a1f2-cbf98234b49a
குக் வித் கோமாளியில் பங்கேற்கும் சமையல் நிபுணர்கள் மதம்பட்டி ரங்கராஜ், தாமு. - படம்: ஊடகம்

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி இம்மாத இறுதியில் வெளியாக இருப்பதாக அறிவித்து இருக்கிறது விஜய் தொலைக்காட்சி.

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ‘குக் வித் கோமாளி’யும் ஒன்று. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களில் பலர் திரைத்துறையில் வாய்ப்புகள் கிடைத்து நடிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை இயக்கிய பார்த்திபன், நிகழ்ச்சி தயாரிப்பாளர், சமையல் நிபுணர் வெங்கடேஷ் பட் ஆகியோர் வெளியாயினர்.

அதனால் இனி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி கிடையாது என்று பேசப்பட்டது. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி ஒரு காணொளியை வெளியிட்டு அதில் புதுப் பொலிவுடன் சமையல் நிபுணர்கள் தாமு, மதம்பட்டி ரங்கராஜுடன் இம்மாதம் 27ஆம் தேதி சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவித்து ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்