‘குபேரா’ தலைப்புக்கு எதிர்ப்பு

‘குபேரா’ தலைப்புக்கு எதிர்ப்பு

1 mins read
fa07a87e-877c-4c20-aae0-2d4345a36c8b
‘குபேரா’ படத்தில் தனு‌‌ஷ். - படம்: ஊடகம்

தனுஷ் நடித்து வரும் ‘குபேரா’ படத்தின் தலைப்பு தன்னுடையது என்று ஒரு தயாரிப்பாளர் வழக்கு தொடுக்க முடிவெடுத்துள்ளார்.

நடிகர் தனுஷ், சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்கும் படம், ‘குபேரா’. பான் இந்தியா படமாக உருவாகும் இந்தப் படத்தில் நாகர்ஜுனா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

தனுஷ், பிச்சைக்காரன் தோற்றத்தில் இருக்கும் இந்தப் படத்தின் முதல் தோற்ற சுவரொட்டி வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இந்தப் படத்தின் தலைப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் இதே தலைப்பை தெலுங்கானா திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்து வைத்துள்ளார்.

‘குபேரா’ தலைப்பை தனுஷ் படத்துக்கு வைத்துள்ளது பற்றி, திரைப்பட வர்த்தக சபையில் நரேந்திரா முறையிட்டுள்ளார். அவருக்குச் சரியான பதில் இதுவரை கிடைக்கவில்லை.

அதனால் அவர் வழக்குத் தொடர இருப்பதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி