தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாக்களிக்க ரஷ்யாவில் இருந்து சென்னைத் திரும்பினார் நடிகர் விஜய்

1 mins read
869281bb-bd25-4edb-9033-51b6ffa4c68e
நடிகர் விஜய். - படம்: ஊடகம்

ரஷ்யாவில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய் தேர்தலில் வாக்களிக்க நேற்று முன்தினம் சென்னை வந்தார்.

அண்மையில் விஜய் நடித்து வரும் ‘கோட்’ படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

அதனால் படத்தின் மீதிக் காட்சிகளை விரைவில் முடிப்பதற்காக படக்குழு ரஷ்யாவிற்கு சென்றிருந்தது. அங்கு விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக ரஷ்யாவில் இருந்து விஜய் சென்னை திரும்பினார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி