தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மீண்டும் இணையும் சூர்யா - ஜோதிகா

1 mins read
78b3d202-e009-4287-a856-fb8ca86ce4be
ஜோதிகா, சூர்யா. - படம்: ஊடகம்

காதல் கதையில் மீண்டும் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள்.

“சூர்யா சிறந்த கணவர். எனக்கு எல்லா விதத்திலும் மதிப்பு கொடுக்கிறார். நான் மீண்டும் நடிப்பதற்கு மிகப்பெரிய உறுதுணையாக இருந்தவரே சூர்யாதான்,” என்று பல மேடைகளில் பேசியிருந்தார் நடிகை ஜோதிகா.

ஜோதிகா கடைசியாக ‘ஷைத்தான்’ என்ற இந்திப் படத்தில் நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் ஜோதிகாவும் சூர்யாவும் மீண்டும் இணைந்து நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் படத்தை ‘சில்லுக்கருப்பட்டி’ பட இயக்குநர் ஹலிதாவோ இல்லை ‘பெங்களூர் டேஸ்’ படத்தின் இயக்குநர் அஞ்சலி மேனனோ இயக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்தப் படம் காதல் கதையாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. சில நாள்களுக்கு முன்புதான் ஜோதிகா, “நல்ல காதல் கதை அமைந்தால் நானும் சூர்யாவும் இணைந்து நடிக்கத் தயார்,” என்று சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்