தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விக்ரமின் அடுத்த படம் ‘வீர தீர சூரன்’

1 mins read
74db9c09-51d5-426e-ab52-2207cc094930
வீர தீர சூரன் படத்தில் விக்ரம். - படம்: ஊடகம்

நடிகர் விக்ரம் ‘சித்தா’ பட இயக்குநர் அருண்குமாருடன் இணையும் புதிய படத்திற்கு ‘வீர தீர சூரன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

‘சித்தா’ இயக்குநர் எஸ்.யு.அருண்குமார், அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார். விக்ரமின் 62வது படமான இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ‘வீர தீர சூரன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்புக் காணொளி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

3.45 நிமிடங்கள் ஓடும் அந்தக் காணொளியில் முழுக் காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இரவு நேரத்தில் மளிகைக் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் விக்ரமை கொல்ல சிலர் திட்டமிடுகிறார்கள். அவர்களை விக்ரம் எதிர்கொள்ளும் அந்தக் காட்சி ரசிக்க வைக்கிறது. இதற்கு முக்கியமான காரணம், ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும், மஞ்சள் நிற ஒளியில் படமாக்கப்பட்ட விதமும் தான்.

அந்தக் காணொளியில் விக்ரமின் தோற்றம் கவனிக்க வைக்கிறது. படத்தின் தலைப்பில் இரண்டாம் பாகம் என குறிப்பிடப்படுகிறது. இதன் முந்தைய பாகம் அடுத்து வெளியாகும் எனத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி