ஜூன் 13ல் மம்முட்டியின் ‘டர்போ’ படம் வெளியீடு

ஜூன் 13ல் மம்முட்டியின் ‘டர்போ’ படம் வெளியீடு

1 mins read
74ff7085-0e60-408a-9e6c-6300b2708d70
‘டர்போ’ படத்தில் நடிகர் மம்முட்டி. - படம்: ஊடகம்

மலையாளத்தில் மம்முட்டி நடித்துள்ள ‘டர்போ’ என்ற படம், வரும் ஜூன் 13ஆம் தேதி திரைக்கு வருவதை படக்குழு உறுதி செய்துள்ளது.

ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்முட்டி நடித்த ‘பிரம்மயுகம்’ என்ற படம், கடந்த பிப்ரவரியில் திரைக்கு வந்து வெற்றிபெற்றது. பிறகு ஓடிடியிலும் வெளியானது.

இதையடுத்து அவர் நடித்துள்ள படம், ‘டர்போ’. சண்டைக் கலந்த திகில் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை வைசாக் இயக்கியுள்ளார்.

ஏற்கெனவே அவரது இயக்கத்தில் ‘போக்கிரி ராஜா’, ‘மதுர ராஜா’ ஆகிய படங்களில் மம்முட்டி நடித்திருந்தார். ‘டர்போ’ படத்தில் மம்முட்டியுடன் கன்னட நடிகர் ராஜ் பி.ஷெட்டி, தெலுங்கு நடிகர் சுனில், அஞ்சனா ஜெயப்பிரகாஷ் நடித்துள்ளனர்.

மம்முட்டியின் ‘வேஃபேரர் பிலிம்ஸ்’ தயாரித்துள்ளது. விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்ய, கிறிஸ்டோ சேவியர் இசை அமைத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்