தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘அரண்மனை 4’ வெளியாகும் தேதியில் மாற்றம்

1 mins read
45f909d4-a109-4bd4-b65d-6a20953f004f
‘அரண்மனை 4’ படக்காட்சி. - படம்: ஊடகம்

இயக்குநர் சுந்தர்.சி இயக்கி இருக்கும் ‘அரண்மனை 4’ படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றத்தை அறிவித்து உள்ளது படக்குழு.

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் ‘அரண்மனை 4’ திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் முந்தைய மூன்று பாகங்களில் நடித்துள்ள சுந்தர்.சி இந்த பாகத்திலும் நடித்துள்ளார்.

மேலும் இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

அண்மையில் இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியானது. அத்துடன் படம் ஏப்ரல் 26ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

சுந்தர்.சியின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கையில் திடீரென்று ‘அரண்மனை 4’ படம் அடுத்த மாதம் 3ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி