‘காந்தாரா’ பாணியில் ‘ரூபன்’

‘காந்தாரா’ பாணியில் ‘ரூபன்’

1 mins read
4601f6d8-3fb5-4dac-a229-5ce91c5f7124
‘காந்தாரா’ படம் - படம்: ஊடகம்

‘காந்தாரா’ பட பாணியில் உருவாகியுள்ளது ‘ரூபன்’. ‘ஏகேஆர் பியூச்சர் பிலிம்’ பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘ரூபன்’. இப்படத்தை கே. ஆறுமுகம் இளங்கார்த்திகேயன், எம்.ராஜா ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 19 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளிவருகிறது.

‘காந்தாரா’, ‘அனுமான்’ போன்ற வெற்றிப் படங்களின் வரிசையில் ‘ரூபன்’ படத்தில் சபரிமலை ஐயப்பனை மையமாக வைத்து வணிகம் கலந்த படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் நாயகனாக விஜய் பிரசாத், நாயகியாக காயத்ரி மற்றும் சார்லி, ராமர், கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இத்தகவலை இப்பட இயக்குநர் ஐயப்பன் எஸ். தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்