ரசிகர்கள் மோதல்; யுவனின் இன்ஸ்டகிராம் பக்கம் முடக்கம்

1 mins read
e6598239-83f3-44cc-b3a3-17510766219f
விஜய்யுடன் யுவன். - படம்: ஊடகம்

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டகிராம் கணக்கு திடீரென மூடப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் இது தொடர்பாக தாம் உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தில் ‘விசில் போடு’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளது.

இணையத்தில் வெளியிடப்பட்ட இப்பாடல் சூட்டோடு சூடாக 38 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

பாடல் சுமாராக இருப்பதாக இசையமைப்பாளர் அனிருத்தின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட, விஜய் ரசிகர்கள் பலர் கொந்தளித்துப் போயினர்.

இருதரப்புக்கும் இடையே சமூக ஊடகங்களில் மோதல் வெடித்ததை அடுத்து, யுவனின் இன்ஸ்டகிராம் பக்கம் முடக்கப்பட்டதாக தகவல் பரவியது.

இந்நிலையில், தொழில்நுட்பப் பிரச்சினையால் இப்படியோர் நிகழ்வு நடந்துள்ளது என்றும் தமது கணக்கை மீட்க தொழில்நுட்பக் குழுவினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார் யுவன்.

மேலும், தமது ரசிகர்களை விரைவில் சந்திக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்