‘ஆடைகளுக்காக அதிகம் செலவிட மாட்டேன்’

‘ஆடைகளுக்காக அதிகம் செலவிட மாட்டேன்’

1 mins read
872931df-41be-4960-8b12-ebe9a0776be2
மிருணாள் தாக்கூர். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நிலையை எட்டிப்பிடித்தாலும் ஆடைகள் வாங்க பணத்தைக் கண்டபடி செலவிட மாட்டேன் என்கிறார் நடிகை மிருணாள் தாக்கூர்.

சிறு வயது முதல் பொருளியல் ரீதியாகப் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டதாகவும் அந்த அனுபவங்களை தம்மால் மறக்க இயலாது என்றும் பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“விலை உயர்ந்த உடைகள் வாங்குவது வீண் செலவு. பிடித்த உடைகளுக்காக அதிக அளவில் பணம் செலவு செய்தாலும் அவற்றை ஒருமுறை மட்டும்தான் பயன்படுத்த முடியும்.

“சினிமாக்கள், பட விழாக்கள், விருந்துகளுக்காக நான் இப்போதுகூட சில உடைகளை வாடகைக்கு எடுத்து உடுத்திக்கொண்டு செல்கிறேன்.

“எந்தவொரு நிகழ்வுக்கும் உடைகளுக்காக இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் செலவிட்டதில்லை,” என்கிறார் மிருணாள் தாக்கூர்.

இதையடுத்து, ரசிகர்கள் இவரை கஞ்சத்தனம் மிகுந்த நடிகை என்று சமூக ஊடகங்களில் கிண்டலடித்து வருகின்றனர். ஆனால் மிருணாள் இதைக் கண்டுகொள்ளவில்லை.

குறிப்புச் சொற்கள்
நடிகை

தொடர்புடைய செய்திகள்