அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது

1 mins read
ef900a10-9b27-4ea4-9e87-90c714458767
அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மான். - படம்: ஊடகம்

பிரபல நடிகர் அமிதாப் பச்சன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இருவருக்கும் காலஞ்சென்ற பாடகி லதா மங்கேஷ்கர் பெயரிலான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் வாழ்த்துகள் குவிகின்றன்.

பாரத ரத்னா விருது பெற்ற லதா மங்கேஷ்கர், தனது 92வது வயதில் காலமானதை அடுத்து தேசத்திற்கும் சமூகத்திற்கும் கலைக்கும் இசைக்கும் தன்னலமற்ற சேவை செய்பவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.

லதா மங்கேஷ்கரின் தந்தை தீனாநாத் நினைவுநாளையொட்டி, வரும் 24ஆம் தேதி இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை முதலாம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி பெற்றார்.

குறிப்புச் சொற்கள்