வாடகைத்தாய்: உண்மையை மறைக்கும் தீபிகா

வாடகைத்தாய்: உண்மையை மறைக்கும் தீபிகா

1 mins read
fc980424-4f01-4f95-aeb9-bf0b5a2a19fe
தீபிகா படுகோன். - படம்: ஊடகம்

நடிகை தீபிகா படுகோன் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது.

சில மாதங்களுக்கு முன்புதான் தாய்மை அடைந்துள்ளதாக தீபிகா தெரிவித்திருந்தார். வரும் செப்டம்பர் மாதம் குழந்தையை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

குழந்தை தொடர்பான அறிவிப்புக்குப் பின்னர் பொதுவெளியில் தோன்றும்போது தளர்வான ஆடைகளை அணிவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், தாம் நடிக்கும் ‘சிங்கம் எகைன்’ படத்தில் சக்தி என்ற கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார் தீபிகா.

இப்படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அவற்றைப் பார்க்கும்போது தீபிகா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற உள்ளது உறுதியாகி உள்ளதாகவும் அவர் தன்னைப் பற்றிய உண்மைகளை மறைப்பதாகவும் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்