சமூகப் பிரச்சினைகளை விவரிக்கும் படத்தில் ஆண்ட்ரியா

சமூகப் பிரச்சினைகளை விவரிக்கும் படத்தில் ஆண்ட்ரியா

1 mins read
2c314877-af32-44cd-ae47-648d3a8ecc25
‘மனுசி’ படத்தில் ஆண்ட்ரியா. - படம்: ஊடகம்

இயக்குநர் கோபிநயினார் இயக்கத்தில் உருவாகிறது ‘மனுசி’ திரைப்படம்.

இயக்குநர் வெற்றிமாறன் இப்படத்தை தயாரிக்க உள்ளார். இந்தப்படமும் நாயகியை முன்நிலைப்படுத்தும் படைப்பாக உருவாகிறது என்றும் ஆண்ட்ரியா நாயகியாக நடிக்கிறார் என்றும் தெரியவந்துள்ளது.

இளையராஜா இசையமைக்கும் ‘மனுசி’ படத்தின் முன்னோட்டக் காட்சித்தொகுப்பை விஜய் சேதுபதி தனது எக்ஸ் தளத்தில் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்.

இதில் நாசர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் சமூகப் பிரச்சினைகள் இப்படத்தில் விரிவாக அலசப்படும் என்றும் கூறப்படுகிறது.

“இதுபோன்ற படைப்புகளில் நடிப்பது ஆகச்சிறந்த அனுபவமாக இருக்கும். எனக்கு அத்தகைய வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி.

“கோபிநயினார் சமூக பொறுப்புள்ள இயக்குநர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை,” என்கிறார் ஆண்ட்ரியா.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்