பெண்களின் உயர்வுக்காக புது அமைப்பு தொடங்கிய சம்யுக்தா

பெண்களின் உயர்வுக்காக புது அமைப்பு தொடங்கிய சம்யுக்தா

1 mins read
17a2151b-296c-4776-b38d-47be925939ec
சம்யுக்தா. - படம்: ஊடகம்

‘வாத்தி’ படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சம்யுக்தா, ஆதி சக்தி என்ற புது அமைப்பைத் தொடங்கியுள்ளர்.

இதுகுறித்து தனது சமூக ஊடகப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமது புதிய, புனிதப் பயணம் குறித்து கூடுதல் தகவல்களை விரைவில் பகிர்ந்துகொள்ள இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“ராமநவமி நாளன்று ஆதி சக்தி அமைப்பைத் தொடங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. இது பெண்களின் உயர்வுக்காக அர்ப்பணிக்கப்பட்ட அமைப்பாகும். இந்த அமைப்பின் சிறப்பை அறிவிப்பதில் பெருமை அடைகிறேன்.

“இம்முயற்சிக்கு உங்களது தெய்வீக ஆதரவும் ஆசிர்வாதமும் மிகுதியாகவே அமையட்டும்,” என்று சம்யுக்தா கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்