மறுவெளியீடு காணும் ‘மங்காத்தா’

1 mins read
a3a2ab57-b09d-4a1d-9bf0-372263d4858a
‘மங்காத்தா’ படத்தில் அஜித். - படம்: இந்திய ஊடகம்

பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற படங்களை மறு வெளியீடு செய்வது அதிகரித்து வருகிறது. அண்மையில் சில படங்கள் இவ்வாறு வெளியாகின.

இந்நிலையில், அஜித் நடிப்பில் உருவான ‘மங்காத்தா’ திரைப்படம் மறுவெளியீடு செய்யப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கிய இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

எதிர்வரும் மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளையொட்டி ‘மங்காத்தா’ மறுவெளியீடு செய்யப்படுகிறது.

அஜித் தனது 53வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.

குறிப்புச் சொற்கள்