தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘ஆலன்’ ஓர் எழுத்தாளனின் வாழ்க்கைத் தேடல்

1 mins read
21a8c3df-5378-4fc4-86fa-851c21306fd5
‘ஆலன்’ படத்தில் வெற்றி. - படம்: ஊடகம்

ஆலன் படம் ஓர் எழுத்தாளனின் வாழ்க்கைத் தேடலுடன் அழுத்தமான காதல் களத்தைக் கொண்ட படம் என்கிறார் இயக்குநர்.

படம் பற்றி இயக்குநர் கூறும்போது, “ஆலன்’ படம் படமாக்கப்பட்டபோது கொடைக்கானலில் கடும் மழையும் குளிரும் உடன் பயணித்தது.

“சென்னையில் படமாக்கப்பட்ட போது புயலும் காற்றும் இந்தக் காதலை ஆரத் தழுவியது.

“வாரணாசியிலும் ரிஷிகேசிலும் படமாக்கப்பட்ட போது பனிக்காற்றும் கடும் குளிரும் கூடவே இருந்து தாலாட்டியது.

“இப்படி இயற்கை அன்னை ஆசீர்வதித்த இந்தக் காதலை தமிழ் ரசிகர்களின் பார்வைகளுக்கு பரிமாற இறுதி கட்ட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறோம்,” என்றார் இயக்குநர் புதுமுகம் ஆர்.சிவா.

படத்தில் எழுத்தாளராக வெற்றி நடிக்கிறார். இவர் ‘ஜீவி’, ‘கேர் ஆப் காதல்’, ‘வனம்’, ‘மெம்ரீஸ்’, ‘பம்பர்’, ‘ரெட் சாண்டல்’ படங்களில் நடித்தவர். அவருடன் நாயகிகளாக ஜெர்மன் மதுராவும் அனு சித்தாராவும் நடித்திருக்கிறார்கள்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்